விவிபேட் கருவிகளை கொண்டு செல்ல வாகனங்கள் தயார்

 

தஞ்சாவூர், ஏப்.22: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகளை கொண்டு செல்வதற்கான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23ம் தேதி) நடைபெற உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கான பொதுத்தேர்தல் தேதி கடந்த மாதம் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பின்னர், கடந்த மாதம் 30ம் தேதி வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 9ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் தஞ்சை மாவட்டத்தில் 94 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Related Stories: