திருவாரூர் மாவட்டத்தில் 1,271 வாக்குச்சாவடி மையங்களில் 2,542 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

 

திருவாரூர்,ஏப். 22: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1,271 வாக்குசாவடி மையங்களிலும் 2 ஆயிரத்து 542 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் என 4 எம்எல்ஏ தொகுதிகள் இருந்து வரும் நிலையில் நாளை (23ந் தேதி) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளன.

Related Stories: