அமெரிக்காவில் 8 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

அமெரிக்க: அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலுள்ள ஷ்ரெவ்போர்ட் நகரில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு குடும்ப தகராறினால் தனது வீடு உட்பட மூன்று வீடுகளில் ஒரு நபர் துப்பாக்கி சூடு நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. விவாகரத்து கோரி மனைவியுடன் சண்டையிட்டு வந்த அந்த நபர் சம்பவத்துத்தன்று ஆக்ரோஷமாக காணப்பட்டிருக்கிறார்.

வழக்கம் போல மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு இருந்த போது அவரது குழந்தைகள் மற்றும் பக்கத்துக்கு வீட்டு குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் ஆவேசத்தில் கொந்தளித்த அந்த நபர் துப்பாக்கி எடுத்துவந்து தனது மனைவி மற்றும் உறவினர் பெண் ஆகியோர்மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கிறார். பின் அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை சற்றும் மனசாட்சியின்றி சரமாரியாக சுட்டுத்தள்ளி இருக்கிறார். இதில் அவர் குழந்தைகள் 7 பேர் மற்றும் மற்றொரு குழந்தையென 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துவிட்டனர்,

நிகழ்விடத்தில் விளையாடிக்கொண்டிருந்த 9வது குழந்தை மட்டும் அவர் பார்வையில் படாமல் வீட்டுக்கூரைக்கு தாவி சென்று அங்கு இருந்து கீழே குதித்து தப்பியோடி இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் சாலைக்கு ஓடி சென்று துப்பாக்கி முனையில் காரில் வந்த நபரை மிரட்டி கீழே இறங்க செய்து அந்த காரில் தப்பி ஓடி இருக்கிறார். இந்த சம்பவம்அப்பகுதியை உலுக்கியெடுத்த நிலையில் தகவல் அறிந்து அடுத்த சில நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் ஷமார் எல்கின்ஸ் என அடையாளம் காணப்பட்டது. அவர் தப்பியோடிய திசையில் போலீசார் காரில் விரட்டி சென்றுள்ளனர். எல்கின்ஸ் தப்பி சென்ற கரை போலீசார் மடக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் இதில் குற்றவாளி எல்கின்ஸ் சுட்டு கொல்லப்பட்டார்.

உயிரிழந்த 8 குழந்தைகளும் 3 வயது முதல் 14 வயது வரையிலானவர்கள் என தெரியவந்துள்ளது. வீடு கூரையில் இருந்து குதித்த சிறுவனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுடப்பட்ட 2 பெண்களும் படுங்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறி இருப்பதாக உறவினர்களிடையே விசாரித்த போது தெரியவந்தது. கடந்த ஜனவரி 2024ஆம் ஆண்டில் இல்லினாய்ஸ்ல் ஜூலியட் நகரில் 8 பேர் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்காவில் நடந்த மிக மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: