தெஹ்ரான்: ஈரானில் சிக்கிய F-15 போர் விமான விமானியின் மீட்பு நடவடிக்கையின் போது வார் ரூமில் (War Room) இருந்த அமெரிக்கா அதிபர் டிரம்பை வெளியேற்றிய தகவல் தற்போது தெரியவந்துள்ளது. ஈரான் அமெரிக்கா இடையிலான போரில் அமெரிக்காகவின் F -15 விமானம் ஈரானில் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது, அது ஈரான் தாக்குதலால் வீழ்த்தப்பட்டது.
இந்த விமானத்தில் பயணித்த இரண்டு பேரும் பாராசூட் மூலம் தப்பித்த நிலையில் அதில் ஒருவர் அமெரிக்கப் படையால் உடனடியாக மீட்கப்பட்டார். மற்றொருவரை மீட்க அமெரிக்க படையினர் பெரிய அளவில் முயற்சி எடுத்து வந்தார்கள்.
இதனிடையே தப்பித்து ஈரானுக்குள் இருக்கும் விமானியை கண்டுபிடித்து தரும் பொதுமக்களுக்கு பெரியளவிலான வெகுமதி வழங்கப்படும் என்று ஈரான் ராணுவம் அறிவித்தது. இதனால் இவர்களை யார் மீட்க போகிறார்கள் என்ற பரபரப்பு எழுந்த நிலையில் அந்த விமானியை வெற்றிகரமாக மீட்டதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த மீட்பு நடவடிக்கை அமெரிக்கா ராணுவத்தின் மிகப்பெரும் சாதனையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மீட்பு நடவடிக்கை போது வார் ரூம் (War Room) கூட்டங்களில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை அந்நாட்டின் ராணுவத்தினர் வெளியேற்றினர். இது குறித்து வெளியான செய்தியில் F-15 விமானி ஈரானில் சிக்கிக்கொண்டது தெரிந்ததும் டிரம்ப் மிகவும் ஆத்திரம் அடைந்ததாகவும் அதிகாரிகளிடம் பல மணிநேரம் கத்தி கூச்சலிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், டிரம்ப்பின் பொறுமையின்மை மற்றும்உணர்ச்சிவசப்படும் குணம் மீட்பு நடவடிக்கை பாதிக்கக்கூடும் என்பதால் அவர் வார் ரூம் (War Room) ஆலோசனை கூட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் முக்கிய விவரங்கள் மட்டும் அவருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அமெரிக்கா அதிபர் டிரம்ப்க்கு பதில் துணை அதிகாரி ஜே.டி. வான்ஸ் (J.D. Vance) மற்றும் வெள்ளைமாளிகை (White House)அதிகாரிகள் மட்டுமே நேரடி தகவல்களை அப்போது பெற்று கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த செய்திகளுக்கு வெள்ளைமாளிகை மறுப்பு தெரிவித்ததோடு மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததற்கு டிரம்ப்பின் தலைமையே காரணம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
