கரடி தாக்கியதாக இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முயற்சி, அமெரிக்காவில் சிக்கிய நூதன மோசடி கும்பலுக்கு சிறை

அமெரிக்ககா: போலியாக இன்சூரன்ஸ் பணத்தை கிளைம் செய்ய விததமான மோசடிகள் உலக முழுவது நடக்கின்றன. வேறு ஒருவரின் சடலத்தை காட்டி இறந்ததாக ஏமாற்றுவது, குடும்ப உறுப்பினர்களே இன்சூரன்ஸ் செய்து உள்ளவரை கொலை செய்துவிட்டு விபத்துபோல் சித்தரித்து கிளைம் செய்வது, நிறுவனங்களை வேண்டும் என்றே தீ வைத்து இழப்பீடு பெறுவது என பல செய்திகளை பார்த்திருப்போம்.

அமெரிக்காவில் போலியாக காப்பீடு பெறுவதற்காக ரோல்ஸ்ரோய்ஸ், மெர்சிடிஸ் போன்ற சொகுசு கார்களை கரடி வேடத்தில் சென்று மனிதர்கள் தாக்கிவிட்டு கரடி தாக்கியதாக இன்சூரன்ஸ் கிளைம் பெற்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. மோசடி கும்பலை கண்டுபிடித்து போலீசார் பிடித்தது எப்படி?

கலிபோனியாவில் காட்டு பகுதியில் உள்ள சாலையில் 2024ஆம் ஆண்டு ஒரு ரோல்ஸ்ரோய்ஸ் கார் , இரண்டு மெர்சிடிஸ் கார்களை கரடி தாக்கியது, காரை வழிமறித்து காரின் வெளிப்புறம் உள்ளே உள்ள இருக்கை உள்ளிடவற்றை சேதப்படுத்தியது. இது தொடர்பாக கார்களின் உரிமையாளர்கள் ஒரு லட்சத்து நாற்பத்தி இரண்டாயிரம் டாலர் இழப்பீடு கோரி காப்பீடு நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும் சான் பெர்னார்டினோ மலைப்பகுதிகளில் வாகனங்களுக்குள் கரடி ஒன்று சேதப்படுத்தும் பல காணொளிகள் அவர்கள் சமர்பித்துள்ளனர்.

காப்பீடு நிறுவனத்தினர் காரில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் அப்போது கரடியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. இது தொடர்பாகபோலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
போலீசார் ஆபரேஷன் Deerclog என்ற பெயரில் விசாரணை நடத்தினர், காப்பீட்டுதுறையால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருக்கைகள் மற்றும் கதவுகளில் கீறல்கள் இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து அந்த போட்டோ மற்றும் வீடியோக்களை வனவிலங்குகள் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது அது கரடி அல்ல என்றும் கரடி உடையில் உள்ள மனிதர்கள் என அவர்கள் கண்டறிந்தனர். கரடியின் நடவடிக்கைகளையும் மனிதனின் நடவடிக்கைகளில் உள்ள வித்தியாசத்தினையும் வனத்துறையினர் ஒப்பீடு செய்து சான்று அளித்துள்ளனர்.

இதையடுத்து காப்பீடு கோரியவர்களின் வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அந்த வீட்டில் இருந்து கரடி உடை நகம் என பலவற்றை பறிமுதல் செய்தனர். ஒரு பெண் உள்ளிட்ட மூவரை பிடித்து விசாரித்த போது அவர்கள் காப்பீடு மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு சிறை தண்டனையும் 50 ஆயிரம் டாலர் அபராதமும் விதித்தது. மேலும் மற்றொருவர் மீதான விசாரணை தொடர்ந்து வருகிறது. காப்பீடு பெறுவதற்காக கரடி உடை அணிந்து சென்று ரோல்ஸ்ரோய்ஸ், மெர்சிடிஸ் கார்களை சேதப்படுத்தி காப்பீடு பெற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Stories: