வரத்து குறைவால் காய்கறி விலை உயர்வு

அண்ணாநகர்: வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் வருகிறது. வரத்து குறைவு காரணமாக நேற்று காலை கோயம்பேட்டில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.60யில் இருந்து ரூ.90க்கும், இஞ்சி ரூ.120லிருந்து ரூ.200க்கும், பச்சை பட்டாணி ரூ.180க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் முத்துகுமார் கூறும்போது, ‘‘வரத்து குறைவால் இஞ்சி, பீன்ஸ் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பச்சை பட்டாணி ரூ.180க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பச்சை பட்டாணி சீசன் குறைந்துள்ள நிலையில், சாயம் பூசப்பட்ட பச்சை பட்டாணி விற்பனை செய்கிறார்களா என்று பொதுமக்கள் தெரிந்து வாங்க வேண்டும். சாயம் பூசப்பட்ட பச்சை பட்டாணி விற்பனை செய்யும் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்,’’ என்றார்.

The post வரத்து குறைவால் காய்கறி விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: