ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அசிங்கமாக திட்டிய பாஜக மாஜி எம்எல்ஏ: தொண்டர்கள் மைக்கை பிடுங்கியதால் பரபரப்பு

வைஷாலி: ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தகாத வார்த்தையால் திட்டிய பாஜக முன்னாள் எம்எல்ஏ பேசிய மைக்கை தொண்டர்கள் பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் ஹாஜிபூர் அருகே பாஜக சார்பில், அனைத்து கட்சி தலைவர்களும் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய லோக் ஜனசக்தி மூத்த தலைவருமான அச்சுதானந்த் சிங் பங்கேற்றார். அப்போது அவர், பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் குறித்து தகாத வார்த்தைகளால் திட்டி பேசினார்.

அவரது பேச்சுக்கு, அங்கிருந்த பாஜக தொண்டர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஒருகட்டத்தில் அச்சுதானந்த் சிங்கை சுற்றி வளைத்து, அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கிக் கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய கருத்து கூறிய அச்சுதானந்த் சிங், தனது அரசியல் வாழ்க்கையை பாஜகவில் இருந்து தொடங்கினார். ஆரம்பத்தில் ராஜ்நாத் சிங்குக்கு நெருக்கமானவராகவும் இருந்தார். ஆனால் பாஜகவில் இருந்து விலகி லோக் ஜனசக்தி (சிராக் பஸ்வான்) கட்சியில் சேர்ந்த பிறகு, அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அசிங்கமாக திட்டிய பாஜக மாஜி எம்எல்ஏ: தொண்டர்கள் மைக்கை பிடுங்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: