திருவள்ளுவர் பல்கலை தேர்வில் மீண்டும் சர்ச்சை

வேலூர்: வேலூர் அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 70க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்று வரும் பருவத்தேர்வு கேள்வித்தாள் குளறுபடி மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் நடந்து முடிந்த பருவத்தேர்வில் பழைய கேள்வித்தாள் அப்படியே கேட்கப்பட்டது மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கடந்த 8ம்தேதி முதுகலை இரண்டாம் ஆண்டு கணித அறிவியல் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. அதில், ‘புரோகிராமிங் சி பிளஸ் பிளஸ்’ என்ற பாடப்பிரிவுக்கான கேள்வித்தாளில் இளங்கலை கணித அறிவியல் படிப்பில் கேட்கப்படும் ‘புரோகிராமிங் சி’ பாடப்பிரிவில் இருந்து அதிக கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இந்த விடைத்தாள்களை திருத்த கல்லூரி ஆசிரியர்கள் சிலர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி வரும் 27ம் தேதி (நாளை) மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.

The post திருவள்ளுவர் பல்கலை தேர்வில் மீண்டும் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: