போதைப்பொருள் எதிர்ப்பு தின பேரணி: வேலூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூர்: சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை வேலூரில் கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி வேலூர் கோட்டை காந்தி சிலை எதிரே நடந்தது. பேரணியை கலெக்டர் சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், கலால் உதவி ஆணையர் முருகன். டிஎஸ்பி திருநாவுக்கரசு, கலால் தாசில்தார் ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கலெக்டர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இந்த பேரணி பழைய பஸ்நிலையம், தெற்கு காவல் நிலையம், திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் வழியாக சென்று நேதாஜி மைதானத்தில் நிறைவு பெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிராக பாதகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post போதைப்பொருள் எதிர்ப்பு தின பேரணி: வேலூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: