தெலுங்கானாவில் ஒரே நாளில் 65 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது; பொதுமக்கள் கடும் அவதி..!!

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வெங்கடாபூர் மண்டலம் லட்சுமிதேவிபேட்டையில் 65 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. தெலங்கானா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. கரீம்நகர், பெத்தப்பள்ளி, நல்கொண்டா, கம்மம், சூர்யாபேட்டை, மஹபூபாபாத், விகாராபாத் மற்றும் வாரங்கல் என 8 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது. இதனால் நேற்றும், இன்றும் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க ஹைதராபாத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மூன்று கட்டமாக வீட்டிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வெங்கடாபூர் மண்டலம் லட்சுமிதேவிபேட்டையில் 65 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது.

தெலுங்கானா மாநிலம் சித்தியாலில் 62 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 20 இடங்களில் தலா 20 செ.மீ. மழை பெய்துள்ளது. கன்பூர் மண்டலம் சேல்பூரில் 48 செ.மீ., ரெகோண்டாவில் 47 செ.மீ. மழை பொழிந்துள்ளது. மொகுலப்பள்ளியில் 40 செ.மீ., கார்ககுடத்தில் 39 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் தற்போது வரை சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இரண்டு பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தெலுங்கானாவில் ஒரே நாளில் 65 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது; பொதுமக்கள் கடும் அவதி..!! appeared first on Dinakaran.

Related Stories: