பெண் காதலை ஏற்க மறுத்ததால் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை

*போலீசார் விசாரணை

திருமலை : பெண் காதலை ஏற்க மறுத்ததால் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் டோமா மண்டலம் கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜவான் குந்தா சிண்டு(20). இவர் 2023 இல் இந்திய ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பெங்களூரில் தனது முழு பயிற்சியை முடித்தார்.

பின்னர் குஜராத்தில் பணியில் சேர வேண்டியிருந்த நிலையில் ஒரு வார விடுப்பில் சிண்டு கிராமத்திற்கு வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த பெண்னை காதலித்து வந்த சிண்டு தனக்கு வேலை கிடைத்து விட்டதாகவும் காதலை கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அந்த பெண் காதலை ஏற்க மறுத்துவிட்டதால் சிண்டு தங்களது சொந்த விவசாய தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெற்றோர் தகவல் அறிந்து வந்து பார்பதற்குள் சிண்டு இறந்த நிலையில் ராணுவத்தில் வேலை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தங்களை ஏமாற்றி சென்று விட்டாயே என பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து டோமா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் காதலை ஏற்க மறுத்ததால் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: