சுதந்திரத்திற்கு பிறகு 70 ஆண்டுகளில் நடக்காத பணிகள் உங்கள் தலைமையின் கீழ் சாத்தியமாகியுள்ளது : ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!!

டெல்லி : 18வது மக்களவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, “மக்களவை சபாநாயகராக பொறுப்பேற்ற ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகள். ஓம் பிர்லாவின் சிரித்த முகம் அவையை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர் பலராம் ஜாக்கருக்குப்பின் 2வது முறையாக சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் பொறுப்பு கடினமானது; மீண்டும் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வானதில் மகிழ்ச்சி. 17வது மக்களவையில் பல்வேறு மிக மிக முக்கியமான சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. ஓம் பிர்லா சபாநாயராக இருந்த போது தான் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

மூன்று புதிய குற்றவியல் நடைமுறை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. 17வது மக்களவையில் ஓம் பிர்லாவின் பங்களிப்பு அளப்பரியது. ஓம் பிர்லா தலைமையில் ஜி20 நாடுகளின் சபாநாயகர்கள் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவையில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டார் ஓம் பிர்லா. கொரோனா போன்ற மிக சிக்கலான கால கட்டங்களிலும் அவையை திறம்பட நடத்தினார்.

தேசத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இரு அவைகளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். மக்களவையை எப்படி சிறப்பாக கையாள வேண்டும் என்பது ஓம் பிர்லாவுக்கு நன்றாக தெரியும். நீங்கள் வழிநடத்திய முந்தைய மக்களவையின் சாதனைகளால் நாடு பெருமை கொள்ளும். சுதந்திரத்திற்கு பிறகு 70 ஆண்டுகளில் நடக்காத பணிகள் உங்கள் தலைமையின் கீழ் சாத்தியமாகியுள்ளது. உங்கள் அனுபவம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் எங்களை வழிநடத்துவீர்கள் என நம்புகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சுதந்திரத்திற்கு பிறகு 70 ஆண்டுகளில் நடக்காத பணிகள் உங்கள் தலைமையின் கீழ் சாத்தியமாகியுள்ளது : ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!! appeared first on Dinakaran.

Related Stories: