ஆந்திர மாநிலத்தில் சொந்த சட்டமன்ற தொகுதியான குப்பத்தில் கொட்டும் மழையிலும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு

*ஹந்திரி நீவா கால்வாய் விரிவான அறிக்கை வெளியிட உத்தரவு

சித்தூர் : ஆந்திர மாநிலத்தில் சொந்த சட்டமன்ற தொகுதியான குப்பம் தொகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கொட்டும் மழையிலும் சுற்றுப்பயணம் ேமற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஹந்திரி நீவா கால்வாயை ஆய்வு செய்து விரிவான அறிக்கை வெளியிட உத்தரவிட்டார். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றபிறகு 2 நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு நேற்று வருகை தந்தார்.

அவருக்கு மாநில விளையாட்டு துறை அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டி உற்சாக வரவேற்பு அளித்தார். அதேபோல் சித்தூர் கலெக்டர் சுமித்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் குப்பம் சட்டமன்றத் தொகுதி சாந்திபுரம் மண்டலத்தில் கொட்டும் மழையிலும் முதல்வர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தொடர்ந்து வாக்களித்த மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். சாந்திபுரம் மண்டல சின்னாரி தொட்டியில் ஹந்த்ரினிவா கால்வாயை ஆய்வு செய்தார். பின்னர் சிறப்பு வாகனத்தில் சாலை வழியாக சென்றார். மாநில முதலமைச்சரை காண ஏராளமானோர் திரண்டனர். சிறப்பு வாகனத்தில் இருந்து இறங்கி மக்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

சாந்திபுரம் மண்டலம் தும்சியை சேர்ந்த சைதன்யா சிறுநீரகப் பிரச்னை இருப்பதாக முதலமைச்சரிடம் கூறி உதவி கேட்டார். உடனடியாக முதல்வர் அந்த பெண்ணுக்கு இலவசமாக சிகிச்சை செய்ய அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார். இதைதொடர்ந்து காடேப்பல்லி பள்ளியில் கட்டப்பட்டு வரும் சொந்த வீட்டின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். தனது சொந்த தொகுதிக்கு முதல்வராக வந்த சந்திரபாபு நாயுடுவை காண சாலை நெடுகிலும் இருசக்கர வாகனங்களுடன் கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.

சாந்தி புரம் மண்டலம் சின்னாரி தொட்டியில் உள்ள ஹந்திரி நீவா கால்வாயை ஆய்வு செய்த பின், சாலையில் சிறப்பு வாகனத்தில் பயணித்தபோது, தும்மிசி சாலையில் மக்களைச் சந்திக்க வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார்.

மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சாந்தி புரம் மண்டல் சின்னாரி தொட்டியில் உள்ள ஹந்த்ரினிவா கால்வாயை ஆய்வு செய்து விட்டு பிற்பகல் 2.53 மணிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் நீர் பாசன துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். ஹந்த்ரினிவா கால்வாய் குறித்து விரிவான அறிக்கையை அதிகாரிகள் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று குப்பம் நகரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டு அறிகிறார்.

The post ஆந்திர மாநிலத்தில் சொந்த சட்டமன்ற தொகுதியான குப்பத்தில் கொட்டும் மழையிலும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு appeared first on Dinakaran.

Related Stories: