திருவிழா முடிந்து 5வது வாரத்தையொட்டி திருப்பதி கெங்கையம்மனுக்கு முத்துக்களால் சிறப்பு பிரமாண்ட அலங்காரம்

*திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருப்பதி : திருவிழா முடிந்து 5வது வாரத்தையொட்டி திருப்பதி கெங்கையம்மனுக்கு முத்துக்களால் சிறப்பு பிரமாண்ட அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ெகங்கையம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் அரசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவிற்கு அனைத்து மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கெங்கையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த திருவிழா கடந்த மாதம் நடைபெற்றது.

திருவிழா முடிந்த பின்னர் ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் திருப்பதி கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவிழாபோல் பூஜைகள் நடைபெறும். திருவிழா காலங்களில் வர இயலாதவர்கள் திருவிழா முடிந்த ஐந்து வாரங்களில் வந்து அம்மனை தரிசனம் செய்து நேர்த்தி கடன்களை முடிப்பார்கள்.

அவ்வாறு ஐந்தாவது வார செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு நேற்று திருப்பதி கெங்கைம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. பின்னர் திருப்பதி கெங்கையம்மனை முத்துக்களால் அலங்காரம் செய்து தங்க முக கவசம் அணிவிக்கப்பட்டது. அம்மனின் கருவறை முழுவதும் முத்துக்களால் அலங்கரிகப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வேடமிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். நேற்று ஐந்தாவது வாரம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு திருப்பதி கெங்கையம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

The post திருவிழா முடிந்து 5வது வாரத்தையொட்டி திருப்பதி கெங்கையம்மனுக்கு முத்துக்களால் சிறப்பு பிரமாண்ட அலங்காரம் appeared first on Dinakaran.

Related Stories: