தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை நாங்குநேரி சம்பவம் வேதனையை தருகிறது

சென்னை: நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : நாங்குநேரியில் நடந்த சம்பவம் சாதி பிரச்னை அடிப்படையில் நடந்துள்ளது. குறிப்பாக மாணவர்களிடையே இது போன்ற உணர்வு ஏற்படக் கூடாது. இந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர்களிடையே சாதி ரீதியான வெறுப்புணர்வை யாரும் தூண்டக் கூடாது.

வருங்காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்களும், எண்ணங்களும் ஏற்படாதவாறு அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசு பள்ளிக் கல்வித்துறையும் சரி, அரசு பள்ளியின் தலைமையும் சரி இதுபோன்ற சம்பவங்களில் தொடர் கண்காணிப்புத் தேவை. மாணவர் சமுதாயம் வருங்கால இந்தியாவை உருவாக்க கூடிய சமுதாயம். அரசும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்களை நல்வழிப் படுத்தக் கூடிய, நன்மை பயக்க கூடிய வழிமுறைகளை போதிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை நாங்குநேரி சம்பவம் வேதனையை தருகிறது appeared first on Dinakaran.

Related Stories: