15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.! மோடி அரசின் அடக்கு முறைக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிவு

டெல்லி: மோடி அரசின் அடக்கு முறைக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என காங்கிரம் எம்.பி. ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கனிமொழி, மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நடந்த பாதுகாப்புக் குறைபாட்டை விவாதிக்க வேண்டும் என்றும் , அதற்கு காரணமான பாஜக எம்.பி பிரதாப் சிம்கா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடியதற்காக நான் ,கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உட்பட 15 எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து மக்கள் விரோத மோடி அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். ஆனால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பாஜக எம்.பி மீது எவ்வித நடவ்டிக்கையும் இல்லை. மோடி அரசின் அடக்கு முறைக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். போராட்டம் தொடரும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.! மோடி அரசின் அடக்கு முறைக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிவு appeared first on Dinakaran.

Related Stories: