பஞ்செட்டி, வேலம்மாள் போதி வளாகத்தில் 16 ஆயிரம் மாணவர்கள் 21 வகை யோகாசனங்கள்

திருவள்ளூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 29 கிளைகளைக் கொண்ட வேலம்மாள் போதி வளாகம். இந்த போதி வளாகம் சார்பாக சர்வதேச யோகா தினம் அனைவரும் போற்றும் வகையில் சிறப்புடன் நடைபெற்றது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் போதி வளாகத்தில் சர்வதேச யோகாசன தின நிகழ்ச்சி வேலம்மாள் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் உத்தரவின் பேரில் நடைபெற்றது.

இந்த மாபெரும் யோகாசன நிகழ்ச்சிக்கு வேலம்மாள் கல்வி குழுமத்தின் இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் தலைமை தாங்கினார். கல்வியியல் இயக்குனர் கீதாஞ்சலி சசிகுமார் முன்னிலை வகித்தார். இந்த மாபெரும் யோகாசன நிகழ்ச்சியில் 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 21 விதமான யோகாசனங்களை மிக நேர்த்தியாக செவ்வனே செய்து வேலம்மாள் பள்ளிக்கு பெருமையை சேர்த்தனர். இந்த யோகாசன நிகழ்ச்சி ஆசிய மற்றும் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பஞ்செட்டி, வேலம்மாள் போதி வளாகத்தில் 16 ஆயிரம் மாணவர்கள் 21 வகை யோகாசனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: