புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

சென்னை: புதிய சட்டங்கள் நேற்று நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. ஒன்றிய அரசு நேற்று அமலுக்கு கொண்டு வந்த 3 குற்றவியல் சட்டங்களில் முக்கிய அம்சங்களாக, இனி காவல் நிலையத்துக்கு சென்றுதான் புகார் தர வேண்டும் என்பது இல்லை. மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவே புகார் தர முடியும். எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்.

குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கால அவகாசம் 90 நாட்கள். விசாரணையை முடிக்க வேண்டிய நாட்கள் 180. விசாரணை முடிந்த 30 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும். சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி,சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதியப்பட்டது. நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்ற அசாம் மாநிலத்தைச் சோ்ந்த அல்தாப் அலி,முஜிபுா் அலி ஆகியோரிடம் மோட்டாா் சைக்கிளில் வந்த நபா்கள் கைப்பேசியை பறித்துச் சென்றனா்.

இது தொடா்பாக இருவரும், போலீஸாா் புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா், பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் 304(2) பிரிவுப்படி வழக்கை பதிவு செய்தனா். இதுவே புதிய குற்றவியல் சட்டப்படி, தமிழகத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதேபோல, சென்னை காவல்துறையில் முதல் நாளில் ராயப்பேட்டை, கோட்டூா்புரம், நந்தம்பாக்கம், துரைப்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட 6 காவல் நிலையங்களில் புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதியப்பட்டன. இதேபோல ஆவடி மாநகர காவல் துறையின் கீழ் உள்ள காட்டூா்,சோழவரம் காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், தாம்பரம் மாநகர காவல் துறையில் 2 வழக்குகளும் பதியப்பட்டன.

The post புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: