அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

சென்னை: ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்ட 1000 பக்தர்கள் அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ளது. அம்மன் திருகோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிக பயணம் செல்ல உள்ளனர். சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை மண்டலங்களில் உள்ள அம்மன் கோயில்களுக்கு செல்லும் பயணம்; ஆன்மீக பயணம் ஜூலை 19, 26, ஆக.8, 9 ஆகிய 4 நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன. ஆன்மிக பயணம் விரும்புவோர் விண்ணப்பங்களை 17-ம் தேதிக்குள் இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்; www.hrce.tn.gov.in என்ற அறநிலையத்துறை இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம் appeared first on Dinakaran.

Related Stories: