சிவசேனா கட்சியின் கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த கோகவாலேவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சிவசேனா கட்சியின் கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த கோகவாலேவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது என சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சிவசேனா கட்சியின் கொறடா உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அப்போதைய துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். இந்த தகுதி நீக்க நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்தும், ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்தும் உத்தவ் தாக்கரே வழக்கு தொடுத்தார். இந்நிலையில், 16 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததால், பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைத்ததில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், இந்த நீதிமன்றத்தின் மூலம் மீட்டெடுத்திருக்கலாம். அவர் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் ராஜினாமா செய்துவிட்டதால் இப்போது முந்தைய நிலை தொடரும் என அறிவிக்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் சிவசேனா கட்சியின் கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த கோகவாலேவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது என தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

The post சிவசேனா கட்சியின் கொறடாவாக ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த கோகவாலேவை நியமித்த சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: