வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு

சென்னை: முதலமைச்சரின் தனித்தீர்மானம் மீதான விவாதத்தில் உறுப்பினர் வேல்முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் கருத்து. ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்தும் முதலமைச்சரின் தனித்தீர்மானத்துக்கு கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில் தனித்தீர்மானம் மீதான விவாதத்தில் உறுப்பினர் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  ஈஸ்வரன், செல்வப்பெருந்தகை பேசியதாவது,

தமிழ்நாடு அரசே தரவுகளை சேகரிக்க வேண்டும்: வேல்முருகன்

தேர்தலுக்காக கடந்த காலத்தில் அதிமுக அரசு வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியதால் அது ரத்தானது. கலைஞர் வழியில் சமூக நீதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காக்க வேண்டும். வன்னியர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான தரவுகளை மாநில அரசே சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும்; அப்படி இல்லாவிடில் தமிழ்நாடு அரசே தரவுகளை சேகரிக்க வேண்டும். எண்ணிக்கைக்கு ஏற்றவாறு சாதிவாரியாக உரிமைகளை வழங்க கணக்கெடுப்பு அவசியம் வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள். சாதிய ரீதியான விஷங்களை தொட்டுவிட்டால் சமூகத்தில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும். சாதிய வட்டத்துக்குள் என்னை சுருக்கிப்பார்ப்பதை நான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பும் வளர்ச்சி பெற வேண்டும்: ஈஸ்வரன்

நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் வளர்ச்சி பெற வேண்டும் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது: செல்வப்பெருந்தகை

இந்தியாவில் வேலைவாய்ப்புக்கும் சமூக நீதிக்கும் முதல் முதலில் குரல் எழும்பியது தமிழ்நாட்டில் இருந்துதான் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஒன்றிய அளவில் சமூக நீதிக்கு எதிரான, உண்மைக்குப் புறம்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 2011ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை எதற்காக ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை. இதுவே இவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்பதற்கு அடையாளம். முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்தைக் காங்கிரஸ் பேரியக்கம் வரவேற்கிறது. முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை பேசினார்.

 

The post வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: