யானை வழித்தடங்களில் உள்ள மின் மாற்றிகளில் மோல்டட் கேஸ் சர்க்யூட் பிரேக்கர் நிறுவப்படும் : புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை : பசுமை எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு தனியார் மூலம் 2,000 மெ.வாட் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். எரிசக்தித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு..

*ரூ. 200 கோடி மதிப்பீட்டில் புதிய / கூடுதலாக விநியோக மின்மாற்றிகள் : ரமான மின்சார விநியோகத்திற்காக 11 கி.வோ மற்றும் 2 2 கி.வோ மின்னழுத்த விகிதங்களில் 25 கேவி, 63 கேவிஏ, 100 கேவிஏ, 200 கேவிஏ மற்றும் 250 கேவிஏ ஆகிய பல்வேறு திறன்களைக் கொண்ட 2,500 எண்ணிக்கை புதிய / கூடுதல் விநியோக மின்மாற்றிகள் தமிழ்நாடு முழுவதும் நிறுவப்படும்.

*ரூ. 211 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய துணை மின் நிலையங்கள் : திருப்பூர் – கொங்கல் நகர் – 230 ..திருச்சி – தங்க நகர் – 110 8..

*ரூ. 217 கோடி மதிப்பீட்டில் 19 திறன் மின்மாற்றிகள் மேம்பாடு : சென்னை, காஞ்சிபுரம் மண்டலங்களில் அதிகரித்து வரும் மின் தேவையினை கருத்தில் கொண்டும். மின் சுமையைக் குறைப்பதற்கும் 19 திறன் மின்மாற்றிகள் (Power Transformers) மேம்படுத்தப்படும்.

*விரிவான எரிசக்தி திறன் மேம்பாட்டு இயக்கம் : எரிசக்தி திறனை மேம்படுத்துவதற்கும், பெரும் அளவிலான மின்சார சேமிப்பை ஏற்படுத்துவதற்கும், வீட்டுவசதி, தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறைகளில் “விரிவான எரிசக்தி திறன் மேம்பாட்டு இயக்கம்” செயல்படுத்தப்படும்.

*பசுமை எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு தனியார் மூலம் மின் உற்பத்தி நிலையங்கள் : சூரிய எரிசக்தி, காற்றாலை மற்றும் இதர பசுமை எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு தனியார் மூலம் 2000 மெகாவாட் பசுமை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

*மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கை : புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியினை அதிகரிப்பதற்காக, காற்றாலை மற்றும் சூரியஎரிசக்தியுடன் இணைந்த(Hybrid) மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கை வகுக்கப்படும்.

*ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மின்சாரம் எச்சரிக்கை உணரி சாதனங்கள் : களப்பணியாளர்களின் கூடுதல் பாதுகாப்பிற்காக, மின்சார சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் போது மின் கட்டமைப்பு தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா என்பதை கண்டறியும் எச்சரிக்கை உணரி சாதனங்கள் வழங்கப்படும்.

*ரூ. 25 கோடியில் மின்விநியோக பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை மேம்பாடு : விவசாயிகளின் உயிர் பாதுகாப்புக்காகவும், தேவையற்ற மின்தடைகளை தவிர்க்கவும், சிலிகான் ஓவர்ஹெட் லைன் இன்சுலேஷன் ஸ்லீவ்ஸ் (லாக்கிங் டைப்) நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

*ரூ. 20 கோடி மதிப்பீட்டில் மின் காப்பு பணிகள் : தென்னந்தோப்புகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளின் வழியாக செல்லும் மின் பாதைகளில், மின் தடை ஏற்படுவதைத் தடுத்து, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும், வனப்பகுதிகளில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்கவும், உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளை மின் காப்பு செய்ய நடவடிக்கை.

*ரூ.75 கோடி மதிப்பீட்டில் மின் கட்டமைப்பு மேம்பாடு: 1. மூன்று புதிய 33/11 கி. வோ துணை மின் நிலையங்கள் நிறுவப்படும்.2.ஆறு 33/11 கி.வோ துணை மின் நிலையங்களிலுள்ள மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும்.

*ரூ. 6.50 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றிகள் : யானை வழித்தடங்களில் ஏற்படும் மின் |விபத்துகளைத் தவிர்க்க, அடர்ந்த காடுகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளின் தாழ்வழுத்த பகுதியில் (LV Side) Moulded Case Circuit Breaker நிறுவப்படும்.

*ரூ. 4.8 கோடி மதிப்பீட்டில் பட்டயப் பொறியாளர்களுக்கு பயிற்சி : தொழில் பழகுநர் சட்டத்தின் கீழ், 500 பட்டயப் பொறியாளர்களுக்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளில் ஒரு வருட கால தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும்.

*ரூ. 1.5 கோடி செலவில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக பணியாளர்களின் தொழில்நுட்பம் மற்றும் ஆளுமை திறன்களை மேம்படுத்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

The post யானை வழித்தடங்களில் உள்ள மின் மாற்றிகளில் மோல்டட் கேஸ் சர்க்யூட் பிரேக்கர் நிறுவப்படும் : புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: