செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை செவ்வாய்கிழமைக்கு (27.06.2023) ஒத்திவைப்பு

சென்னை : செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு (27.06.2023) ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். அமலாக்கத்துறை தரப்பு தனது வாதத்தை செவ்வாய்க்கிழமை முன்வைக்க உள்ளதாக தகவல். செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதங்களை முன்வைத்தார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அவகாசம் கோரி திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்க கோரினார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு செவ்வாய்கிழமைக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

The post செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை செவ்வாய்கிழமைக்கு (27.06.2023) ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: