4 மாவட்டங்களில் மழை அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா?

சென்னை: தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நடக்க இருந்த பல்கலைக் கழகத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் கடந்த 13ம் தேதி தொடங்கிய அரையாண்டுத் தேர்வுகள், 22ம் தேதி முடிய உள்ள நிலையில், தற்போது தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதனால், நிலைமைக்கேற்ப அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேர்வுகளை ஒத்திவைப்பது அல்லது வேறு தேதியில் நடத்துவது குறித்து முடிவு செய்யலாம் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

The post 4 மாவட்டங்களில் மழை அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா? appeared first on Dinakaran.

Related Stories: