சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி: 10 பேரை கைது செய்து விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடி கணக்கில் பண மோசடி செய்த புகாரில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் பாவநத்தம் கிரமாத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி சசி தம்பதியை இந்த மோசடி வழக்கில் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில் தற்போது அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிகஞர்களாக பணிபுரிந்து வரும் திருப்பூரை சேர்ந்த நாகேந்திர குமார் என்பவரின் துணையோடு சுமார் 400க்கும் மேற்பட்டோரிடம் கோடி கணக்கிலான பணம் மோசடி செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.

மேலும், அரசு முத்திரையுடன் கூடிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டும் உயநீதிமன்றம் பெயரில் தனி web site தொடங்கப்பட்டும் பெரும் மோசடி அரங்கேற்று இருப்பது அம்பலமானது. இதனையடுத்து வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. நீதிமன்றத்தை ஏமாற்றும் அளவுக்கு நீதிமன்ற பெயரை பயன்படுத்திய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், நேரடி நியமன டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 18பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீசார் சுமார் 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி: 10 பேரை கைது செய்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: