பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகாரிகள் வீடு வீடாக சென்று தூய்மை பணி

*குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தனர்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து மேல்நீர் தேக்க தொட்டிகளை தூய்மை செய்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட ஹயாத் நகர், லம்பாடி காலனி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள மக்களின் பயன்பாட்டிற்காக மேல்நீர் தேக்க தொட்டி அமைத்து லட்சுமி நகர் அருகே உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டில் இருந்து தண்ணீர் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் அண்ணான்ப்பட்டி கூட்ரோடு அருகே உள்ள அயாதி நகர் பகுதிக்கு செல்லும் மேல்நீர் தேக்கத் தொட்டியிலும் அயாத்து நகர் பகுதியில் உள்ள லம்பாடி காலனிக்கு செல்லும் மேல்நிலைத்தக்க தொட்டியிலும் முறையாக சுத்தம் செய்யாமல் குடிநீர் கலங்கிய நிலையில் புழுக்களுடன் செல்வதாகவும் அண்ண்ண்டப்பட்டி கூட்ரோடு பகுதியில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் குடிநீர் ஏற்றும் பைப்பு உடைந்து அதிக பாசிப்படைந்து அதில் அட்டைப்பூச்சிகள் ஒட்டி உள்ளது.

இதனால் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் விநியோகிக்கப்படும் குடிநீரானது புழுக்களுடன் கலங்கிய நீராக வருவதை வடிகட்டி பயன்படுத்திய நிலையில் லம்பாடி வட்டம் பகுதியை சேர்ந்த சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இது குறித்து கடந்த 23ஆம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது.

இதனை அடுத்து சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வாட்டர் போர்டு அதிகாரிகள் ஆகியோர் நேற்று முன்தினம் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். மேலும் லம்பாடி காலனி பகுதியில் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொண்டு அப்பகுதியில் ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்டவர்களை தெளித்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அண்ணான்டப்பட்டி கூட்ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்து உடைந்த பைப்பை சீரமைத்து சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். வாட்டர் போர்டு அதிகாரிகள் மேல்நீர் தேக்க தொட்டியில் ஏற்றப்பட்ட நீரை ஆய்வு செய்து சுத்தமான குடிநீரை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சுகாதாரத் தூய்மை அளிக்கப்பட்டு, சுத்தமான குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

The post பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகாரிகள் வீடு வீடாக சென்று தூய்மை பணி appeared first on Dinakaran.

Related Stories: