தமிழுக்கு பெருமை சேர்த்த பாதிரியார் சீகன் பால்கு-க்கு சிலையுடன் அரங்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் முதல் முதலில் ஆச்சு இயந்திரத்தை நிறுவி தமிழுக்கு பெருமை சேர்த்த பாதிரியார் சீகன் பால்குவுக்கு அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த பாதிரியார் சீகன் பால்கு என்பவர் இந்தியாவிற்கு வந்து தமிழ் மீதான ஆர்வத்தில் அம்மொழியை கற்று கடந்த 1713ம் ஆண்டு தரங்கம்பாடியில் முதல் அச்சு இயந்திரத்தை நிறுவியிருந்தார். இதன் மூலம் கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டையும் தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இவரது இந்த முயற்சி பல நூல்களை தமிழில் அச்சிடுவதற்கு உதவியுள்ளது.

இந்நிலையில் இவரது பெருமையை போற்றும் விதமாக தரங்கம் படியில் மறைந்த பாதிரியார் சீகன் பால்குவுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என்று சடவென்றவையில் செய்தித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டப்பேரவையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் நன்றி தெரிவித்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ் சுவிசேஷ லூத்தரன் சபையினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கோரியுள்ளனர். தரங்கன்பாடியில் சீகன் பால்குவுக்குமணிமண்டபம் அமைக்கக்கோரி தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில் அரங்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

The post தமிழுக்கு பெருமை சேர்த்த பாதிரியார் சீகன் பால்கு-க்கு சிலையுடன் அரங்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: