தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மழை.. சென்னையில் வெப்பம் உயரும் : வானிலை ஆய்வு மையம் கணிப்பு!!

சென்னை : சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை, “வெப்ப சலனம் காரணமாக, 25.05.2023 முதல் 28.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29.05.202: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னைக்கான வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):க.பரமத்தி (கரூர்) 5, சின்னக்களார் (கோயம்புத்தூர்) 4, வீரகனூர் (சேலம்) 3, ஒகேனக்கல் (தருமபுரி) 2, உதகமண்டலம் (நீலகிரி), ஓடன்சத்திரம் (திண்டுக்கல்), அப்பர் பவானி (நீலகிரி), சேலம், ஆனைமடுவு அணை (சேலம்), காட்பாடி (வேலூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

26.05.2023 முதல் 28.05.2023 வரை: தமிழக கடலோரப்பகுதிகள். மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் இலட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மழை.. சென்னையில் வெப்பம் உயரும் : வானிலை ஆய்வு மையம் கணிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: