தெற்கு பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் என்ற கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை காரணமாக அதிகாலை 3மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டதால், பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன.
இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. கிராமத்திற்கு செல்லும் சாலையும் பாதிக்கப்பட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே, ஐ.நா., அதிகாரி ஒருவர், நிலச்சரிவில் 150 வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டமானது. பலியானோரின் எண்ணிக்கை 670 ஐ தாண்டியதாக கூறியுள்ளார். இந்த பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
The post பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 670-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்: ஐ.நா. தகவல் appeared first on Dinakaran.