வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் லாவோஸ், கம்போடியா ெசல்லும் முன் எச்சரிக்கை அவசியம்: தமிழ்நாடு அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல்

சென்னை: வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள், பயணிப்பதற்கு முன் தாங்கள் பணிபுரியவுள்ள நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல்வேறு வேலை வாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றவுடன் சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அம்மாதிரி சட்டவிரோதமான இணையதள பணிகளை செய்ய மறுக்கும் நபர்களை கடுமையாக துன்புறுத்துகிறார்கள்.

இதுவரை மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து கடந்த வருடம் மட்டும் 83 தமிழர்களை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந்துள்ளது. அந்தவகையில் தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டிற்கு தகவல் தொழில்நுட்ப பணி என்றும், டிஜிட்டல் சேவைகளை சந்தைபடுத்துகின்ற மேலாண்மை பணி என்றும், நம்முடைய இளைஞர்களை அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எனவே லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் 856-2055536568, மின்னஞ்சல் cons.vientianne@mea.gov.in மற்றும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின், மின்னஞ்சல் cons.phnompehh@mea.gov.in. visa.phnompehh@mea.gov.in ஆகியவற்றின் மூலம் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அயலக வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து தீர்வு காண தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 18003093793 (இந்தியாவிற்குள்), 8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு) ஆகியவற்றினை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் சென்னையில் உள்ள குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலர், உதவி எண்- 90421 49222 தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் அல்லது முகமைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் லாவோஸ், கம்போடியா ெசல்லும் முன் எச்சரிக்கை அவசியம்: தமிழ்நாடு அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: