மகாராஷ்டிரா மாநிலம் தானே கெமிக்கல் நிறுவன வெடிவிபத்து பலி 13 ஆக உயர்வு: ஆலை உரிமையாளர்கள் 2 பேர் கைது

தானே: தானேயின் டோம்பிவிலி நகரத்தில் உள்ள அமுதன் கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து மற்றும் அதையொட்டிய தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேயின் டோம்பிவிலி நகரத்தில் உள்ள அமுதன் கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராட்சத விளம்பர பலகை விழுந்த விபத்து மற்றும் உயிர்ப்பலிகளுக்கு பின்னர், டோம்பிவிலி விபத்து மாநிலத்தை உலுக்கியது.

இந்த விபத்து சம்பவத்தின் தீவிரம் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.இவ்வாறு 24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அமுதம் கெமிக்கல் பிரைவேட் லிட் ஆலையின் உரிமையாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மும்பையில் வசிப்பவர்கள் என்றாலும், விபத்து சம்பவத்தை அடுத்து இருவரும் தலைமறைவானார்கள். போலீசாரின் தீவிர தேடலில் மாலதி மேத்தா நாசிக்கில் பிடிபட்டார். அவரது மகன் மலாய் மேத்தா தானேவில் உள்ள மறைவிடத்தில் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post மகாராஷ்டிரா மாநிலம் தானே கெமிக்கல் நிறுவன வெடிவிபத்து பலி 13 ஆக உயர்வு: ஆலை உரிமையாளர்கள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: