பிரதமர் நரேந்திர மோடியின் ‘முஜ்ரா’ பேச்சு: தலைவர்கள் கடும் கண்டனம்

டெல்லி: இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஓட்டு வங்கிக்காக முஜ்ரா நடனம் கூட ஆடுவார்கள் என்று பிரதமர் மோடி பேசி இருப்பதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவில் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து ஒரு பிரதமர் கூட பேசியதில்லை என்று பிரியங்கா சாடியுள்ளார். பீகாரில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி; வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முஜ்ரா நடனம் கூட ஆடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். முஜ்ரா நடனம் என்பது முகலாய மன்னர் சபையில் பெண்கள் ஆடிய கவர்ச்சி நடனம் என்று சிலர் விளக்கம் அளித்திருந்தனர்.

பிரதமர் மோடி தனது பேச்சால் ஒட்டுமொத்த பீகார் மக்களையே அவமானப்படுத்திவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடியுள்ளார். பிரதமர் மோடியின் முஜ்ரா நடன பேச்சை கேட்டு தான் வெக்கப்படுவதாக பிரியங்கா ஆவேசமாக தெரிவித்துள்ளார். சண்டிகரில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி; மொத்த நாடே பணவீக்கம் குறித்தும், வேலையின்மை குறித்தும் கவலைப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி மட்டும் இந்து, முஸ்லீம் இடையே பிரிவினையை தூண்டி விடுவதில் மிகவும் அலுவலக இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

முஜ்ரா என்ற கவர்ச்சி நடனத்துடன் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை ஒப்பிட்டு பிரதமர் மோடிக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். அதில் பரந்த இதயங்களை கொண்ட இந்தியாவில் ஒரு பிரதமரின் பேச்சு இப்படியா இருப்பது என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மனதில் வைத்து தாங்கள் பேசவில்லை என்று தமது கடிதத்தில் தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளார்.

 

The post பிரதமர் நரேந்திர மோடியின் ‘முஜ்ரா’ பேச்சு: தலைவர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: