டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் பலி

டெல்லி: கிழக்கு டெல்லியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் பலியாகினர். தீ விபத்தில் இருந்து 12 பிறந்த குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்ததாகவும், வென்டிலேட்டரில் உள்ள குழந்தை உட்பட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள குழந்தை பராமரிப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணி தொடங்கியது. மருத்துவமனையில் சிக்கியிருந்த 12 பிறந்த குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர். 6 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தீ விபத்தில் மருத்துவமனை முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் மருத்துவமனையை ஒட்டியுள்ள கட்டிடத்திலும் தீ பரவியது. தீ விபத்துக்கான காரணம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

The post டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: