தகவலறிந்து அங்கு வந்த மடிப்பாக்கம் காவல் நிலைய எஸ்ஐ ராமலிங்கம், புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்கு பின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட புவனேஸ்வரி உடல் சடங்குகளுக்கு பின் ஜெயா நகர் வழியாக மயான பூமிக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தபோது, அங்கிருந்த சிலர் சடலத்தை ஜெயாநகர் வழியாக எடுத்துச் சொல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த மடிப்பாக்கம் போலீசார், எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி சடலத்தை எடுத்து செல்ல அனுமதித்தனர். இதையடுத்து, சடலத்தை மயானம் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது
The post தற்கொலை செய்த இளம்பெண்ணின் சடலத்தை தெரு வழியாக கொண்டு செல்ல எதிர்ப்பு appeared first on Dinakaran.
