பெரம்பூர், டிச.9: ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் ‘ஏ’ பிளாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தனிப்படை எஸ்ஐ கார்த்திக் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 17 கிலோ குட்கா சிக்கியது. இதையடுத்து, குட்கா பொருட்களை வீட்டில் தயாரித்து விற்பனை செய்து வந்த ஆனந்தன் (27) மற்றும் அவரது மனைவி சாமுண்டீஸ்வரி (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். ஆனந்தன் மீது ஒரு போக்சோ வழக்கு உள்பட 3 வழக்குகள் உள்ளன. சாமுண்டீஸ்வரி மீது 8 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
