இந்து அமைப்புகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பெரம்பூர், டிச.8: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக பாஜ மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராக பல்வேறு கட்சியினர் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்து அமைப்புகளை கண்டித்து சென்னை ஸ்டாரன்ஸ் சாலை நியூபேரன்ஸ் சாலை சந்திப்பு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவிக நகர் பகுதி குழு உறுப்பினர் ரேணுகா தலைமை வகித்தார்.

இதில், திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் பாஜ மற்றும் இந்து அமைப்புகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்களுக்கு உறுதுணையாக பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதவியை தவறான முறையில் பயன்படுத்தும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் ஜி.ஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: