பொங்கலை ஒட்டி ரூ.27 கோடிக்கு ஆடுகள் விற்பனை

திருமங்கலம்: பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஆட்டு சந்தை நடந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடி வரையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே அய்யலூரில் நடந்த சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் 8,000 ஆயிரம் ஆடுகள், சுமார் ரூ.6 கோடிக்கு விற்பனையாகியுள்ளன. கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு அருகே நடைபெற்ற சந்தையில் ரூ.6 கோடிக்கும், செஞ்சியில் ரூ.3 கோடிக்கும், சின்ன சேலத்தில் ஒரு கோடிக்கும், புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் ரூ.1.50 கோடிக்கும், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் ரூ.1.25 கோடிக்கும், வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் ரூ.20 லட்சத்திற்கும் ஆடுகள் விற்பனையானது.

The post பொங்கலை ஒட்டி ரூ.27 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: