பிரதமர் மோடி டிவீட் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி: உலக சிங்கம் தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘உலக சிங்கம் தினம், நமது இதயங்களை தங்கள் வலிமை, பிரம்மாண்ட உருவத்தால் கவர்ந்த கம்பீரமான சிங்கங்களை கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம். ஆசிய சிங்கங்களின் தாயகமாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில், ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் பாராட்டுகள். அவற்றை தொடர்ந்து போற்றிப் பாதுகாப்போம். அவை இனிவரும் தலைமுறைகளுக்கும் செழித்து வளர்வதை உறுதி செய்வோம்,” என்று கூறியுள்ளார்.

The post பிரதமர் மோடி டிவீட் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: