டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்து வருகிறார். இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை அதிகாரி வியோமியா சிங் விளக்கம் அளிக்கின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் 9 தீவிரவாத முகாம்களை குண்டு வீசி இந்தியா அழித்தது. மும்பை தாக்குதலுக்கு பிறகு பஹல்காமில் நடந்தது கொடூரமான தாக்குதல். கடந்த ஏப்.22ல் அப்பாவி இந்தியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்தியாவில் மத மோதலை தூண்டும் வகையில் பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீர் வளர்ச்சியை தடுப்பதே பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
The post ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கம்..!! appeared first on Dinakaran.