டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று இரவு சந்திக்கிறார். அதிமுகவிடம் 54 தொகுதிகளை கேட்க பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், அதுகுறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு என தகவல். 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை பாஜக கேட்பதால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி. சென்னையில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, கொளத்தூர் தொகுதிகளை பாஜக கேட்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
