டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ள நிலையில் டெல்லிக்குள் டீசல் வாகனங்கள் நுழைய தடை

 

டெல்லி: டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ள நிலையில் டெல்லிக்குள் டீசல் வாகனங்கள் நுழைய தடை விதித்துள்ளது. டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 7 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 440 ஆக திடீரென அதிகரித்தது.

டெல்லியில் காற்றின் தர குறியீடு 440ஐ தாண்டியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையை தவிர அனைத்து நடுத்தர, கனரக சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை தவிர டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தவும் டெல்லி அரசு தடை விதித்துள்ளது. காற்றுமாசு காரணமாக டெல்லி மக்கள் பொதுப்போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி, பிஎஸ் -4 பெட்ரோல் வாகனங்கள் மட்டும் டெல்லிக்கு வர அனுமதி அளிக்கப்படுகிறது. பிஎஸ் 3 பெட்ரோல் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகனங்களை ‘ஆப்’ செய்யுமாறு மாநில அரசு பிரசாரம் செய்து வருகிறது.

Related Stories: