டெல்லி: டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மோசமாக உள்ளதால், GRAP 4 என்ற நிலையிலான கட்டுப்பாடுகள் அமல்; அத்தியாவசியம் அல்லாத சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி, கட்டட இடிப்புப் பணிகளுக்கு தடை, ஆன்லைனில் பள்ளி வகுப்புகள், அலுவலகங்கள் 50% ஊழியர்களைக் கொண்டு இயங்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
