முக்கூடல் சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலயத்தில் தேர்ப்பவனி

பாப்பாக்குடி : முக்கூடல் சிங்கம்பாறையில் உள்ள புனித சின்னப்பர் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு தேர்ப்பவனி, சிறப்பு திருப்பலி ஆகியன நடந்தது.
நெல்லை மாவட்டம், முக்கூடல் சிங்கம்பாறையில் உள்ள புனித சின்னப்பர் ஆலயத்திருவிழா கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மாலையில் திருப்பலி,மறையுரை நடைபெற்றன. திருவிழாவின் 9ம் நாளான்று காலையில் திருப்பலி, திருமணம் முறைப்படுத்துதல், மாலையில் திருப்பலி, தேர்ப்பவனி நடந்தது. இதில், ஆயர் ஜேம்ஸ் சேகர், அருட்பணி ராபின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 25ம்தேதி காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி சென்னை அருட்பணி மைக்கேல் சவரிராஜ் தலைமையில் நடந்தது. அருட்பணி டேனியல் மறையுரை ஆற்றினர்.

தொடர்ந்து நடந்த பெருவிழாத் திருப்பலி சேரன்மகாதேவி பங்குப் பணியாளர் மரியபிரான்சிஸ் தலைமை வகித்தார். பண்டாரகுளம் பங்குப் பணியாளர் அந்தோணி மிக்கேல் மறையுரை ஆற்றினார். பின்னர் புனிதர்களின் தேர்ப்பவனி நடந்தது. இதையடுத்து நடந்த திருமுழுக்குத் திருப்பலியில் அருட்பணியாளர்கள் அலெக்ஸ்ஜோதி, மிக்கேல் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர். திருவிழாவில் முக்கூடல் வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இரவில் கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியன நடந்தது.

இதையொட்டி நடந்த கபடி போட்டியினை தென்காசி மாவட்ட திமுக செயலர் ஜெயபாலன் தொடங்கி வைத்தார். இதில், பாப்பாக்குடி ஒன்றிய திமுக செயலர் மாரிவண்ணமுத்து, நகரச் செயலர் லெட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருள்நேசமணி, ஊர் தலைவர் ஜான்ஜோதி, செயலாளர் சேவியர் ரஜினி, பொருளாளர் ராஜன், விழா கமிட்டியார் ராஜா, சேவியர், பாஸ்கர், அந்தோணிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.

The post முக்கூடல் சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலயத்தில் தேர்ப்பவனி appeared first on Dinakaran.

Related Stories: