மிக்ஜாம் புயலினால் விபத்து மரணமடைந்த தொழிலாளர் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கினார் அமைச்சர் சி.வி.கணேசன்..!!

சென்னை: மிக்ஜாம் புயலினால் விபத்து மரணமடைந்த தொழிலாளர் ஆர்.ஜெயசீலன் குடும்பத்தாருக்கு அமைச்சர் திரு சி.வி. கணேசன் இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது , மிக்ஜாம் புயலினால் பெய்த கனமழையின் காரணமாக சென்னை-32 வேளச்சேரியில் மெசர்ஸ். இந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக கிரீன் டெக் ஸ்ட்ரக்சுரல் கன்ஸ்டரக்ஷன் என்ற ஒப்பந்ததாரர் நிறுவனம் Earthwork செய்யும் பணி மேற்கொண்டு வந்ததாகவும், இப்பகுதியில் கடந்த 04.12.2023 காலை 7.00 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட பள்ளத்தில் கிரீன் டெக் ஸ்ட்ரக்சுரல் கன்ஸ்டரக்ஷன் என்ற நிறுவனத்தின் உதவி மின் பொறியாளர் ஆர்.ஜெயசீலன் மற்றும் கட்டுமானப் பணியை ஒட்டி அமைந்திருந்த கேஸ் பங்கின் EB Room-ல் இருந்த கேஸ் பங்க் ஊழியர் எஸ்.நரேஷ் (வயது 21) த/பெ.சங்கர் என்பவர் அந்த கட்டிடத்துடன் பள்ளத்தில் மூழ்கிவிட்டனர்.

பின்னர் மழைநீர் வடிந்த பின் 08.12.2023 அன்று இருவரும் பிணமாக மீட்கப்பட்டனர். தொழிலாளர் மற்றம் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் உத்தரவிற்கிணங்க இவ்விரு தொழிலாளர்களின் பணியிடத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து சென்னை, தொழிலாளர் இணை ஆணையர்-1 முன்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு 1923ம் ஆண்டு பணியாளர் இழப்பீடு சட்டத்தின் கீழ் ஆர்.ஜெயசீலன் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.15,49,625 ம் எஸ்.நரேஷ் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.16,85,000ம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று தலைமை செயலகத்தில், சென்னை, வேளச்சேரியில் மிக்ஜாம் புயலினால் விபத்து மரணமடைந்த தொழிலாளர்களுக்கு பணியின்போது ஏற்பட்ட விபத்து மரணத்திற்கான இழப்பீட்டு தொகை ரூ.15,49,625க்கான உத்தரவு ஆர்.ஜெயசீலன் மனைவி மஞ்சு இழப்பீட்டு தொகை ரூ.16,85,000க்கான உத்தரவு எஸ்.நரேஷ் தந்தை கே.சங்கரிடமும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஐயந்த், இ.ஆய., , முதன்மைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப. , தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் (நிர்வாகம்) சி. ஹேமலதா மற்றும் தொழிலாளர் இணை ஆணையர்-1 தே.விமலநாதன் ஆகியோர் உள்ளனர்.

The post மிக்ஜாம் புயலினால் விபத்து மரணமடைந்த தொழிலாளர் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கினார் அமைச்சர் சி.வி.கணேசன்..!! appeared first on Dinakaran.

Related Stories: