மார்க்சிஸ்ட் செயலாளர் அறிவுறுத்தல் மீட்பு, நிவாரண பணிகளில் கட்சியினர் ஈடுபட வேண்டும்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயல் முழுமையாக அடங்கும் வரை, அனைவரும் பாதுகாப்புடன் இருந்து, புயலை கடக்க வேண்டும் என மாநில செயற்குழு சார்பில் வேண்டுகிறோம். கட்சியின் மாவட்டக் குழுக்களும், அனைத்து கிளைகளும், நிவாரணம் – மீட்பு பணிகளுக்கு தயாராக இருக்க வேண்டும் எனவும், உதவி தேவைப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை உறுதி செய்தும், அரசு நிர்வாகத்தோடு இணைந்தும் மக்களுக்கு கரம் கொடுக்க வேண்டும்.

The post மார்க்சிஸ்ட் செயலாளர் அறிவுறுத்தல் மீட்பு, நிவாரண பணிகளில் கட்சியினர் ஈடுபட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: