மக்களவை தேர்தல் எதிரொலி ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி ஒருங்கிணைப்பாளர்கள்: காங்கிரஸ் அறிவிப்பு; தமிழ்நாட்டிற்கு பவ்யா நரசிம்மமூர்த்தி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலங்களுக்கான தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் கர்நாடகாவின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளராகவும், ராதிகா கேராவுக்கு சட்டீஸ்கர் மாநில பொறுப்பும், மேத்யூ ஆண்டனி வடகிழக்கு மாநிலங்களையும், மஹிமா சிங்கிற்கு அசாம் மாநிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு பவ்யா நரசிம்மமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானாவிற்கு சுஜாதாபால், ஆந்திராவுக்கு பிஆர். அனில்கமார், கேரளாவுக்கு லாவண்யா பல்லால் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அலோக் சர்மா (பீகார்), ஹர்ஷத் சர்மா (கோவா), சச்சின் சாவந்த் (குஜராத்), அஜய் உபாத்யாய் (அரியானா), அம்ரித் கில் (இமாச்சல பிரதேசம்), ஜோதி குமார் சிங் (ஜார்கண்ட்), அர்ஷ்பிரீத் காதியால் (ஜம்மு), பர்வேஸ் ஆலம் (காஷ்மீர் மற்றும் லடாக்), சரண் சிங் சப்ரா (மத்தியப் பிரதேசம்), சுரேந்திர சிங் ராஜ்புத் (மகாராஷ்டிரா), பபிதா சர்மா (ஒடிசா), அன்ஷுல் அவிஜித் (பஞ்சாப்), ரிது சௌத்ரி (ராஜஸ்தான்), சயானிகா யூனியால் (உத்தரகாண்ட்), அபய் துபே (உத்தர பிரதேசம்), அன்ஷுமன் சைல் (மேற்கு வங்கம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post மக்களவை தேர்தல் எதிரொலி ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி ஒருங்கிணைப்பாளர்கள்: காங்கிரஸ் அறிவிப்பு; தமிழ்நாட்டிற்கு பவ்யா நரசிம்மமூர்த்தி appeared first on Dinakaran.

Related Stories: