வரும் மக்களவை தேர்தலில் திமுக-அதிமுக 18 தொகுதிகளில் நேரடி மோதல்

சென்னை: வரும் மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக 18 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட உள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதி கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே தமிழகத்தில் கட்சிகள் தேர்தல் கால கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த தொடங்கியது. அதிமுக, பாஜ உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி உறுதி செய்ய தடுமாறியது. ஆனால் திமுக தலைமையில் கூட்டணியில் தொகுதி பங்கீடு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே முடிக்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் திமுக 21, காங்கிரஸ் 10, மதிமுக 1, விசிக மற்றும் கம்யூனிஸ் கட்சிகள் தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணி நேற்று தான் இறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளிலும், தேமுதிக 5, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. அதிமுகவின் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக 18 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட உள்ளது. காங்கிரஸ் மற்றும் அதிமுக தமிழகத்தில் 6 இடங்கள் மற்றும் புதுச்சேரியில் நேரடியாக போட்டியிட உள்ளது.

The post வரும் மக்களவை தேர்தலில் திமுக-அதிமுக 18 தொகுதிகளில் நேரடி மோதல் appeared first on Dinakaran.

Related Stories: