கேரளாவில் 24 மணி நேரத்தில் 300 பேருக்கு கொரோனா: 3 பேர் மரணம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் தொற்றுக்கு பலியாகி விட்டனர். இந்தியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஆட்கொல்லி நோயான கொரோனா மீண்டும் மெதுவாக பரவி வருகிறது. சீனா, சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் பரவி வரும் உருமாறிய புதிய வகை ஜேஎன் 1 கொரோனாவும் பரவியுள்ளது. இதுவரை இந்தியாவில் 21 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பரவியுள்ளது. தற்போது கேரளாவில் தான் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

நேற்று முன்தினம் 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 358 பேருக்கு இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 300 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 2669 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதில் 2341 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

The post கேரளாவில் 24 மணி நேரத்தில் 300 பேருக்கு கொரோனா: 3 பேர் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: