கரூர் ரெட்டிப்பாளையத்தில் பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்

கரூர் : கரூர் ரெட்டிப்பாளையம் புதூர் வழியாக செல்லும் பாசன வாய்க்காலை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் அருகே அமராவதி ஆற்றில் தடுப்பணை கட்டி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தடுப்பணை பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு வாய்க்கால்கள் செல்கிறது. இதில், பாசனத்திற்காக தண்ணீர் அவ்வப்போது திறந்து விடப்பட்டு வருகிறது.

இதே போன்ற ஒரு வாய்க்கால் ரெட்டிப்பாளையம் புது£ர் வழியாக செல்கிறது. இந்த வாய்க்காலில் பல்வேறு கழிவுகள் வாய்க்காலின் தன்மை மாறியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்த வாய்க்காலை து£ய்மையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமா? என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாசன வாய்க்காலை பார்வையிட்டு அதனை து£ய்மையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post கரூர் ரெட்டிப்பாளையத்தில் பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: