கழிவுநீர் உந்து நிலையங்களில் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த ரூ.50 கோடியில் உபகரணங்கள்

சென்னை: கழிவுநீர் உந்து நிலையங்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த ரூ.50 கோடியில் நவீன உபகரணங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் குடிநீர் அளவு போதுமானதாக இல்லை. எனவே, எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மத்திய பிரதான குழாயில் இருந்து மாதவரம் உந்து நிலையத்திற்கு ரூ.40 கோடியில் புதிய குடிநீர் குழாய் பதிக்கப்படும்.

கழிவுநீர் உந்து நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த ரூ.50 கோடியில் நவீன உபகரணங்கள் நிறுவப்படும். தேர்வாய்கண்டிகை நீர்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு நீரேற்றும் குழாய் ரூ.31 கோடியில் மேற்கொள்ளப்படும். அனைத்து குடிநீர் திட்டங்களையும் மறுசீரமைத்து 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்படும் என பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

The post கழிவுநீர் உந்து நிலையங்களில் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த ரூ.50 கோடியில் உபகரணங்கள் appeared first on Dinakaran.

Related Stories: